வையாபுரி நகர் அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து. வாலிபர் படுகாயம்.
Karur King 24x7 |10 Aug 2024 1:41 PM GMT
வையாபுரி நகர் அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து. வாலிபர் படுகாயம்.
வையாபுரி நகர் அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து. வாலிபர் படுகாயம். கரூர் மாவட்டம், கந்தசாரப்பட்டி அருகே உள்ள முத்துகுழியூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் வயது 30. இவர் ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை 7:30- மணி அளவில், கரூர்- கோவை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் வையாபுரி நகர் அருகே சென்ற போது, எதிர் திசையில் கோவை மாவட்டம், பீளமேடு அருகே உள்ள சொர்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் சுந்தர் என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், ரஞ்சித் குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரஞ்சித் குமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள செந்தில் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரஞ்சித் குமார் அளித்த புகார் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய ஸ்ரீ ராம் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story