காங்கேயம் பேட்டை மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் அபிஷேகம்

காங்கேயம் பேட்டை மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் அபிஷேகம் விழா நடைபெற்றது இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் தலைமை தாங்கினார்
காங்கேயத்தில் ஆடி வெள்ளி முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காங்கேயம் பேட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள செந்தில் ஆண்டவர் கோவிலில் முதலாம் ஆண்டு புனித மஞ்சள் நீர் அபிஷேக விழா நடத்தப்பட்டது. விழாவில் இந்து முன்னணி இயக்க மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம், மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ்குமார், மாவட்டத் தலைவர் கந்தசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காங்கேயம் பழைய கோட்டை சாலையில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவிலில் இருந்து பேட்டை மாரியம்மன் கோவில் வளாகம் வரை பக்தர்கள் தீர்த்தம் எடுத்து சென்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபாடு நடத்தினர்.
Next Story