ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் அறிய வாய்ப்பு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் அறிய வாய்ப்பு
சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் அவர் படிப்பை படித்த அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு சேர்ந்து படித்து பயன்பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவ/மாணவிகளுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல்(B.Sc Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் (Diploma) சேர்ந்து படித்திட விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவருக்கு (B.sc Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு, ஒன்றை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma Food Production) பட்டயப்படிப்பும், பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினஞர் (Craftmanship Course in Food Production & Patisserie ), உணவு மற்றும் பானசேவையில் கைவினைத்திறன் படிப்பு (Craftmanship Course in Food & Beverage Service), பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு ( Diploma in Bakery &Confectionary) சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள் விமானம் துறைச், கப்பல் துறை மற்றும் சேவை துறைச் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்பும் பெற்றுத்தரப்படும். சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition நிறுவனமானது ISO 9001:2015 தரச்சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும், இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. American Council of Businessஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டிலுள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survey 2022-ன்படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் பதிமூன்றாவது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது. மேலும், மேற்குறிப்பிட்டுள்ள நிறுவனத்தில் படிப்பதற்கு தகுதிகளாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். அதுமட்டுமன்றி, ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story