சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் துறை மற்றும் சைக்கிள் நிறுவனம் இணைந்து நடத்திய சைக்கிள் பேரணியை தேனி மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

பேரணி
தேனியில் சர்வதேச போதை ஒலிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சைக்கிள் பேரணி நடைபெற்றது தேனி மாவட்ட காவல்துறை மற்றும் பாலசங்கா ஸ்மார்ட் சைக்கிள் நிறுவனம் சார்பில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது தேனி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த சைக்கிள் பேரணியை தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா கொடியசைத்து துவக்கி வைத்தார் 10 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த சைக்கிள் பேரணியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் கலந்து கொண்டு போதைப் பொருள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி சைக்கிளை ஓட்டிச் சென்றனர் தேனி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி தேனி புறவழிச்சாலை வழியாக சென்று அன்னஞ்சி விளக்கு, பாலசங்கா சைக்கிள் நிறுவனத்தை இறுதியாக வந்தடைந்தது இந்த சைக்கிள் பேரணியில் சுமார் 150 ககும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர் அவர்களுடன் இணைத்து தேனி கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் சுகுமார் மற்றும் தேனி துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் ஆகியோர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டு சைக்கிளை ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் சைக்கிள் பேரணிகள் பங்கேற்ற மாணவர்களுக்கு சைக்கிள் நிறுவனம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
Next Story