தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
Salem (west) King 24x7 |11 Aug 2024 2:57 AM GMT
முன்னாள் மாணவர் வழங்கினார்
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 64-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சோனா கல்விக்குழுமங்களின் தலைவர் சொ.வள்ளியப்பா தலைமை தாங்கினார். டி.பி.டி.யின் முன்னாள் மாணவரும், பெங்களூரு ஹோம் பேப்ரிக்ஸ் மில் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராமசுவாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் 5 இடங்களை பெற்ற 60 மாணவ-மாணவிகள் உள்பட மாணவ-மாணவிகளுக்கு பட்டைய சான்றிதழ்களை வழங்கினார். கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் பேசுகையில், தனியார் நிறுவனம் 6 மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.85 லட்சம் ஊதியம் பெறும் வகையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 470-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 120-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ.300 லட்சம் வரையிலான ஊதியத்தில் 8-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, மாணவர்களுக்கு தொழில் துறை சார்ந்த பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படுகிறது. என்று கூறினார். விழாவில் கல்லூரி துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் பேசுகையில், மாணவர்கள் வாழ் நாள் முழுவதும் நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சுற்றுக்கொண்டே இருக்க வேண்டும். புதுமையான திட்டங்களை ஸ்டார்ட் அப்ஸ்மூலமாக புதிய தொழில் நிறுவனங்களாக செயல்படுத்த வேண்டும் என்றனர். விழாவில் 681 மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வருகை புரிந்து பட்டைய சான்றிதழ்களை பெற்றனர். பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் கல்லூரியின் தலைவர், துணைத்தலைவர்கள். முதல்வர். துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story