சேலத்தில் விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மீது வழக்கு

சேலத்தில் விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மீது வழக்கு
போலீசார் நடவடிக்கை
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன் லீ பஜார் பகுதியில் மொபட்டில் சென்றான். அப்போது அந்த வழியாக மொபட்டில் சென்ற பெண் மீது சிறுவனின் மொபட் மோதியது. இதில் அந்த பெண் காயமடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story