விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுக்கூட்டம்

விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்
கள்ளக்குறிச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் 60ம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நடந்த கூட்டத்திற்கு, மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினர். அமைப்பு செயலாளர் ராமன், துணைத் தலைவர்கள் நடராஜன், சக்திவேல், பத்ரிநாராயணன், திருப்பதி, இணைச் செயலாளர்கள் விஷ்ணுகுமார், ராஜா, இளங்கோ, பொருளாளர் தணிகைவேல் தாமோதரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் நவீன்குமார் வரவேற்றார். கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர் அகில உலக தலைவர் அலோக்குமார் பேசுகையில்,'விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து வங்கதேச இந்துக்களுக்கு உதவி செய்யும். திருச்செந்துாரில் மாதம்தோறும் கடல் ஆரத்தி மற்றும் அன்னதானம் ஆகியவற்றிற்கு தமிழக அரசு எவ்வித தடையும் ஏற்படுத்தக்கூடாது. அங்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். ஹிந்துக்களின் புனித தலங்களில் பக்தர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்' என்றார்.
Next Story