உடல் உறுப்பு தான முகாம்.

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உடல் மற்றும் உறுப்பு தான முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல்துறையினர் கலந்து கொண்ட சிறப்பு உடல் மற்றும் உடல் உறுப்பு தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமானது பெரம்பலூர் மாவட்ட காவல்துறை, மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் ஆற்றும் கரங்கள் குழு ஆகியோர்கள் இணைந்து இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் வெங்கடேசுவரன் ஆகியோர்கள் உட்பட காவல்துறையைச் சேர்ந்த 15 பேர் உடல் தானமும் 18 பேர் கண் தானமும் செய்தார்கள். இதன்மூலம் பொதுமக்களுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் ஒரு முன்மாதிரியாக இருந்து இந்த உடல் தானம் மற்றும் கண்தானம் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் செய்துள்ளார்கள். இந்த முகாமில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது நாம் இறந்த பின்பும் நமது உடல் மற்றும் உறுப்புகள் தானம் செய்வதனால் இந்த உலகில் இறந்து போகாமல் மற்றவர்களுக்கு உபயோகப்படும் வகையில் வாழ்ந்து கொண்டிருக்கும், என்றும் விருப்பமுள்ளவர்கள் இத்தகைய புனிதமான செயல்களில் ஈடுபடலாம் என்றும் கூறினார்.
Next Story