விபத்தில் ஜவுளி கடை உரிமையாளர் பலி

சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஜவுளிக்கடை உரிமையாளர் உயிரிழப்பு.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கனூரை சேர்ந்தவர் சந் திரசேகரன். இவரது மகன் பிரசாத் (வயது 30). ஜவுளிக் கடை உரிமையாளரான இவர் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் பெரம்பலூர்சாலையில் அரசலூர் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந் தார். அப்போது அதே சாலை யில் ஆத்தூரில் இருந்து பிரசாத் பெரம்பலூர் நோக்கி கறிவேப் பிலை கட்டுகள் ஏற்றி வந்த சரக்கு வேன் ஒன்று பஞ்ச ரானதால், சாலையோரம் நிறுத்தி, பஞ்சர் ஒட்டப்பட்டு, டயரை மாட்டிக் கொண்டி ருந்தனர். அப்போது பிரசாத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சரக்கு வேனின் பின்னால் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட் டதில் பிரசாத்திற்கு தலையில் பலத்த அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காகபெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story