கரூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்.சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அறிவிப்பு.
Karur King 24x7 |11 Aug 2024 7:35 AM GMT
கரூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்.சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அறிவிப்பு.
கரூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்.சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அறிவிப்பு. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கரூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் அறிவித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ரயில் எண் 06295 மைசூர் - காரைக்குடி சிறப்பு ரயில் மைசூரில் இருந்து ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12 :45- மணிக்கு காரைக்குடிக்கு சென்றடையும் எனவும், ரயில் எண் 06296 காரைக்குடி- மைசூர் சிறப்பு ரயில், காரைக்குடியில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை, இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 -10 மணிக்கு மைசூர் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில்கள் மாண்டியா, மத்தூர், ராமநகரம், கெங்கேரி, கே எஸ் ஆர் பெங்களூர், பெங்களூர் கண்ட்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம் பங்காரப்பேட்டை,குப்பம், சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ரயில் நிலைங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் தொடர்ந்து பயணம் செய்யும் ரயில் பயணிகள் இந்த அறிவிப்பை அறிந்து தங்களது பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
Next Story