கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி தெய்வ திருமண விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
Karur King 24x7 |11 Aug 2024 11:22 AM GMT
கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி தெய்வ திருமண விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி தெய்வ திருமண விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூரில், பிரசித்தி பெற்ற கோவிலாக அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமை மிக்க இந்த ஆலயத்தில் திருமண தடை உள்ளவர்கள், திருமண காரியம் கை கூடாதவர்கள், அருள்மிகு அலங்கார வள்ளி, அருள்மிகு சௌந்தரநாயகி உடனாகிய அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிகளுக்கு திருமண வைபவத்தை நடத்தி வைத்தால், அவர்களின் திருமண தடை நீங்கி அவர்களது வாழ்க்கை சிறப்பாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் இந்த கோவிலில் வருடம் முழுவதும் தெய்வத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வழக்கம். அதேசமயம் இந்த திருமண விழாவை பொதுமக்கள் அறியும் வகையில் தொடர்ந்து வருடம் தோறும் கருவூர் ஸ்ரீ மகா அபிஷேக குழுவினர் தொடர்ந்து ஆடி மாதத்தில் தெய்வத்திருமணத்தை வெகு விமர்சையாக நடத்தி வருகின்றனர். தற்போது 26 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த திருமண விழாவில் வசதி படைத்தவரும், வசதி இல்லாதவரும் தங்களது திருமண தடை நீங்குவதற்காக தங்களால் இயன்ற பொருளுதவிகளை செய்து திருமண விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்படுவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த திருமண விழாவில் பங்கேற்கின்றனர். திருமண விழா கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை கோவில் வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி, முளைப்பாரியுடன் கூடிய சீர்தட்டு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று கோவில் வளாகத்தில் உள்ள நால்வர் அரங்கில் திருமண விழா கலை கட்டியது. சிவாச்சாரியார்கள் பல்வேறு சடங்குகளை நடத்தி திருமாங்கல்யத்தை சுவாமிகளின் கழுத்தில் அணிவித்தனர். பின்னர் மகா தீபாதாரணையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் மெய்மறந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் சுவாமிக்கு மொய் பணம் செலுத்தினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
Next Story