பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாககி வருகிறது

மழை
தேனியில் பெய்த கனமழை, அரசு பேருந்துக்குள் கொட்டிய மழையில் நனைந்து கொண்டே பயணித்த பொதுமக்கள், நடத்துனர் அவதிக்குள்ளாகினர் தேனியில் இருந்து சின்னமனூர் செல்லும் அரசு பேருந்து இன்று மாலை தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது அப்போது உப்பார்பட்டி வழியாக பேருந்து சென்ற போது கனமழை பெய்து வந்த நிலையில் பேருந்துக்குள்ளே மழை நீர் வடிய தொடங்கியது இதனால் பேருந்தில் இருக்கைகள் இருந்தும் மழைநீர் முழுவதும் இருக்கை மீது வடிய தொடங்கியதால் பயணிகள் நின்று கொண்டே பயணித்தனர் மேலும் சிலர் தங்களது தலையின் மீது துணிகளை வைத்து மழை நீரில் இருந்து தற்காத்துக் கொண்டு பயணம் மேற்கொண்டனர் பேருந்தில் நடத்துனரே மழை நீரில் நனைந்தபடியே பயணிகளிடம் பயணச்சீட்டு வழங்கும் பணியை மேற்கொண்டார் இதனால் பேருந்தில் சென்ற பயணிகள் மழையில் நனைந்து கொண்டே பயணம் மேற்கொண்டதால் அவதிக்குள்ளாகினர் இந்த பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் எடுத்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது மழைக்காலங்களின் போது அரசு பயணிக்க முடியாத நிலை ஏற்படுவதாக இது குறித்து போக்குவரத்துக் கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளின் கோரிக்கையாக உள்ளது
Next Story