கரூரில் திடீர் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி.

கரூரில் திடீர் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி.
கரூரில் திடீர் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி. தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது. மேலும் கரூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கோடைகாலத்தை நினைவூட்டுவதாகவே இருந்து வருகிறது. 101 டிகிரி அளவுக்கு கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு திடீரென கரூர் நகரப் பகுதிகளில் சூழ்ந்த கருமேகங்கள் திடீரென மழையாக பொழிந்தது. இதனால் வெயிலின் தாக்கத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் இருந்து வந்த பொதுமக்கள் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், விவசாயிகள் தற்போது பெய்துள்ள மழை ஆடிப்பட்டத்தில் விதைத்த சாகுபடிக்கு கை கொடுக்கும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story