சங்ககிரியில் கோயில் குளத்தை தூய்மைப்படுத்திய சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு...

சங்ககிரி : கோயில் குளத்தில் செடி, கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்திய சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு....
சேலம் மாவட்டம், சங்ககிரி, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் குடமுழுக்கு விழா செப்.6ஆம் தேதி நடைபெறுவதையொட்டி கோயிலுக்கு எதிரே உள்ள குளத்தில் தேவையற்ற முட்புதர் செடிகள், கருவேலம் மரங்களை சமூக ஆர்வலர்கள் அகற்றி தூய்மைபடுத்தினர். சங்ககிரி, சந்தைபேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வருகின்ற செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது . இதனையடுத்து இக்கோயிலுக்கு எதிரே உள்ள குளத்தில் தேவையற்ற வேலம் மரங்கள் செடி கொடிகளை வ சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை, பசுமை சங்ககிரி அமைப்பினர் இணைந்து அகற்றி குளத்தில் இருந்த குப்பைகளை அகற்றி தூய்மைபடுத்தினர். இதில் தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை நிர்வாககிள் செந்தில்குமார், சதீஸ்குமார், கிஷோர்பாபு, ராமசாமி, கிருஷ்ணமூர்த்தி, கார்த்தி, பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம்பழனிசாமி, சக்திவேல், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். இது போன்ற சமூக சேவலுக்கு ஏற்பட்ட அமைப்பினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Next Story