சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

சங்ககிரி: திடீரென கொட்டி தீர்த்த கனமழை வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கட்டும் அவதி....
சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை... சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் கடும் அவதி.‌ கீழடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யுமென சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வைகுந்தம், மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை, இடங்கணசாலை, கத்தேரி,தேவூர், அரசிராமணி காவேரிப்பட்டி, புள்ளக் கவுண்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென இரவு நேரங்களில் காற்று, இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து . ஒடியது .இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் திடீரென பெய்த தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலை வருவதால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story