நீரேற்று நிலையம் முன்பு காவிரி உபரிநீர் நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்

நீரேற்று நிலையம் முன்பு காவிரி உபரிநீர் நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
உபரி நீரை நூறு ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க கோரி வெள்ளாளபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சரபங்கா உபரி நீர் திட்டத்தில் அனைத்து ஏரிகளையும் உடனடியாக இணைத்து நீர் நிரப்ப கோரி காவிரி உபரிநீர் நடவடிக்கை குழுவினர் வெள்ளாளபுரம் நீரேற்று நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஒவ்வொரு முறையும் நிரம்பும் பொழுது அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை நீரேற்று திட்டம் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், எம் காளிப்பட்டி,எடப்பாடி,சங்ககிரி போன்ற தாலுகாக்களில் உள்ள 100 வரண்ட ஏரிகளுக்கு நீர் நிரப்ப மேட்டூர் அணை உபரி நீரை சர்பங்கா திட்டம் மூலம் 100 ஏரிகளுக்கு நிரப்ப 2019 ஆம் ஆண்டு 545 கோடி ரூபாய் திட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கப்பட்டது பணிகள் துவக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு சோதனையோட்டம் நடத்தப்பட்டது. தற்போது வரை மந்தகதியில் ஒரு குறிப்பிட்ட 10 ஏரிகளுக்கு மட்டுமே சரபங்கா உபரி திட்டத்தின் மூலம் நீர் நிரப்பப்பட்டு வருகிறது. வெள்ளாளபுரம் ஏரியில் அமைந்திருக்கிற துணை உபரி நீரேற்று திட்டப் பணிகள் முடிவடையாததால் கன்னந்தேரி ஏரிக்கு உபரி நீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்  கன்னந்தேரி ஏரியிலிருந்து ஒலக்கசின்னானூர் வழியில் இருக்கக்கூடிய 30 க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு உபரிநீர் செல்லமுடியாத நிலை, மேலும் நங்கவள்ளி ஏரியிலிருந்து வைரன் ஏரியை இணைக்கும் கால்வாய் பணிகள் முழுமையடையவில்லை. இதனால் வைரன் ஏரி, வாத்திப்பட்டி ஏரி, அரியாம்பட்டி ஏரி,செ. காட்டுப்பட்டி ஏரி, மற்றும் செலவடை வரை உள்ள ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு தலையிட்டு போர்க்கால அடிப்படையில் உபரி நீர் கால்வாய் பணிகளை முடித்து இந்த ஆண்டு 100 ஏரிகளுக்கும் காவிரி வெள்ள உபரி நீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு தலைவர் வேலன், ஒருங்கிணைப்பாளர் தம்பயா, மற்றும் காட்டுவட்டம் ராஜா முன்னிலையில் நடைபெற்றது.
Next Story