கொங்கு பாரம்பரிய வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டம் நிகழ்ச்சி

கொங்கு பாரம்பரிய வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டம் நிகழ்ச்சி
திருச்செங்கோடு கூட்டப்பள்ளி லாரி உரிமையாளர்கள் சங்க மைதானத்தில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி குழுவினரின் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கொங்கு ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வரகூராம் பட்டி, திருச்செங்கோடு, பன்னீர் குத்தி பாளையம், பரமசிவ கவுண்டம் பாளையம், மோரூர், கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம், ஏலூர் பகுதிகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பாவாடை சட்டை அணிந்த சிறுமிகள் தாவணி பாவாடை அணிந்த நடுத்தர வயது பெண்கள், சேலை அணிந்த திருமணமான பெண்கள் என கலந்து கொண்டனர். இதே போல் சிறுவர், நடுத்தர வயது உடையோர், ஆண்கள் என சுமார் 50 பேர் இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வள்ளி கும்மியாடி மகிழ்ந்தனர்408 வது நிகழ்ச்சி 78வது அரங்கேற்ற நிகழ்ச்சி என நடந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக கூட்டப்பள்ளி மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.ஊர்வலம் திடலை வந்தடைந்த உடன் முதலில் அரங்கேற்றம் காணும் சீருடை அணிந்த பெண்கள் வட்ட கும்மி ஆட்டம் என அனைவரும் ஆடினார்கள். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு இந்த வள்ளி கும்மி ஆட்டத்தையும் ஒயிலாட்டத்தையும் கண்டு மகிழ்ந்தனர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு இந்த வள்ளி கும்மி ஆட்டத்தையும் ஒயிலாட்டத்தையும் கண்டு மகிழ்ந்தனர்
Next Story