மர சிற்ப கலைஞருக்கு தமிழக அரசின் பூம்புகார் மாநில விருது

மர சிற்ப கலைஞருக்கு தமிழக அரசின் பூம்புகார் மாநில விருது
விருது
கள்ளக்குறிச்சி மர சிற்ப கலைஞருக்கு தமிழக அரசின் பூம்புகார் மாநில விருதினை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் கைவினைத் தொழிலில் பங்களிப்பு, அபிவிருத்தி, சிறந்த கலைப்படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த கைவினைஞர்களுக்கு ஆண்டுதோறும் பூம்புகார் மாநில விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி 2022-23ம் ஆண்டுக்கான பூம்புகார் மாநில விருதுக்கு, கள்ளக் குறிச்சி, ஏமப்பேர், ஜெ.ஜெ. நகரை சேர்ந்த மர சிற்ப கலைஞர் சக்திவேல் தேர்வு செய்யப்பட்டார். சிற்பி சக்திவேலுவிற்கு தமிழக அரசின் பூம்புகார் மாநில விருது, 4 கிராம் தங்க பதக்கம், 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, தாமிர பட்டயம், சான்றிதழ் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், தலைமைச் செயலர் சிவ்தாஸ்மீனா, கைத்தறி தொழில் துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், பூம்புகார் மேலான் இயக்குனர் கவிதா ராமு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story