மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்வி மையத்தில் மனநல டாக்டர் ஆய்வு
Perambalur King 24x7 |12 Aug 2024 3:32 AM GMT
ஆய்வு
பெரம்பலூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக செயல்படும் உள்ளடக்கிய கல்வி மையத் தினை பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவம் னையின் மனநல டாக் டர்வினோத் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் சிறப்பு குழந்தைகளுக்கு வழங்கப்படும் பேச்சு பயிற்சியுடன் கூடிய தொழில் சார் சிகிச்சை வழங்கப்படுவதை ஆய்வு செய்து, கொடுக்கப்படும் பயிற் சிகளின் மூலம் குழந்தைகளிடம் காணப்படும் முன்னேற்றம் குறித்து பெற்றோர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அவர் மையத்திற்கு அழைத்து வரும் குழந்தைகளின் தேவையை கேட்டறிந்து, அதனை மேல் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். மேலும் அவர் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி தினம் மையத்திற்கு வருகை புரிந்து வளர்ச்சி படி நிலைகளில் தாமதமாகவுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் தசை பயிற்சி, பேச்சு பயிற்சி மற்றும் விளையாட்டு முறையில் வழங்கப்படும் அறிவு சார் பயிற்சிகளை தவறாது மேற்கொள்ள வேண்டும், என்று ஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்
Next Story