ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம்

ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம்
பால்குடத் திருவிழா
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் கே.கே. நகர் புதுக் காலனியில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது இந்தகோவிலில் ஆடி மாதத்தையொட்டி பால்குடம் எடுக்கும் விழா நடந்தது இதல்காக விரதமிருந்த பக்தர்கள் அதே பகுதியில் உள்ள சிவசக்தி மகா மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடங்களை தலையில் சுமந்து ஊர் வலமாக புறப்பட்டனர். பம்பை மேளம் முழங்கப் பக்தர்களின் பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் கொண்டுவந்த பாலால் அம்மனுக்கு அபிஷே கம் நடத்தப்பட்டது அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பய பக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
Next Story