சங்ககிரியில் ஒரே இரவில் இவ்வளவு மழையா!

சங்ககிரியில் ஒரே இரவில் இவ்வளவு மழையா!
சங்ககிரி:சங்ககிரியில் ஒரே இரவில் இவ்வளவு மழையா!
சேலம் மாவட்டம்,சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் அதிகபட்சமாக 69.6 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது... வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யுமென சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வைகுந்தம், மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை, இடங்கணசாலை, கத்தேரி,தேவூர், அரசிராமணி, காவேரிப்பட்டி, புள்ளக் கவுண்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு திடீரென காற்று, இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து . ஒடியது .இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் திடீரென நேற்று இரவு மட்டும் கொட்டி தீர்த்த கனமழையால் அதிகபட்சமாக 69. 6 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story