சேலத்தில் ஆடு திருடிய வாலிபர் சிக்கினார்
Salem (west) King 24x7 |12 Aug 2024 8:26 AM GMT
போலீசார் நடவடிக்கை
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 29). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது ஆடு ஒன்று திருட்டு போனது. இது குறித்து அவர் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சாலமன்ராஜ் மகன் லியன்டர் (24), அவரது நண்பர் ஆகியோர் ஆட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து லியன்டரை போலீசார் கைது செய்து ஆட்டை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story