குடிப்பாட்டு மக்கள் வழிபடும் கோவிலை மீட்டு தரக்கோரி மனு
Perambalur King 24x7 |12 Aug 2024 8:41 AM GMT
பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த, குடிப்பாட்டு மக்கள் வழிபடும் கோவிலை, ஆக்கிரமித்தவர்களிடமிருந்து மீட்டுதர கோரி ஆட்சியரிடம் மனு .
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சில்லக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட காரைப்பாடி கிராமத்தில் உள்ள . சின்ன கருப்புசாமி ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ முத்தையா உட்பட்ட 27 பரிவார தேவதைகளின் கோவில் உள்ளது, இதில் பரம்பரை குலதெய்வ வழிபாட்டு மன்றத்தின் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் அதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவித்த போது, கரைப்பாடி கிராமத்தில் உள்ள கருப்புசாமி ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ முத்தையா உள்ளிட்ட 27 பரிவார தெய்வங்களின் பரம்பரை குலதெய்வ வழிபாட்டு குடிமக்கள் 1500 க்கும் மேற்பட்டோர் தமிழத்தில் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை , தஞ்சாவூர், கன்னியாகுமரி ஈரோடு, கரூர், ஆகிய பல்வேறு மாவட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர் இவர்கள் குலதெய்வமாக வழிபடும் கரைப்படையில் உள்ள கோவிலை, உள்ளுறை சேர்ந்த ஐந்து குடும்பத்தினர் கோவிலை ஆக்கிரமிப்பு செய்து, மற்றவர்களை பூஜை செய்யவும் படைப்பதற்கும் அனுமதி அளிக்காத நிலையில் இது தொடர்பாக காவல் துறையிடம் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது மன்றத்தின் மூலம் பேசி, கோவில் படைக்கும் நபர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்க கேட்டுள்ளனர் அதன்படி அனைத்து குடிப்பாட்டு மக்களின் சார்பாக கோவில் படைப்பவர்கள் யார் நிர்வாகிகள் யார் ? என்பது முடிவு செய்து அதற்கான, ஒப்புதலை இன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளோம் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
Next Story