பாண்டியர் கால அம்மன் கோவில் திருவிழா
Komarapalayam King 24x7 |12 Aug 2024 9:13 AM GMT
குமாரபாளையம் அருகே பாண்டியர் கால அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் பகுதியில், காப்ரா மலை என்னும் மலை உள்ளது. இந்த மலையில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட மசூதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவினையொட்டி, மலைக்கோவில் பகுதியில் சமபந்தி விருந்து நடைபெறும். இந்த சமபந்தியில், 50க்கும் மேற்பட்ட ஆடுகளும், நூற்றுக்கு மேற்பட்ட கோழிகளும் பலியிட்டு விருந்து படைக்கப்படுகிறது. இந்த சமபந்தி விருந்தில் சுற்றுப்பகுதியில் உள்ள படைவீடு, மேட்டுக்கடை, குமாரபாளையம், வெப்படை மற்றும் ஆனங்கூர் பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். சமபந்தி விருந்தின் போது நடைபெறும் பூஜையில் கலந்து கொள்பவர்கள் தாங்கள் வேண்டிய வரம் கிடைத்து விட்டால் அடுத்த வருடம் கிடா வெட்ட வேண்டும் என்பது ஐதீகம். இதற்காகவே இந்த ஆலயத்தில் நூற்றுக்கணக் கணக்கான பக்தர்கள் திரள்வது வாடிக்கையாகும்.
Next Story