அனைத்து லயன்ஸ் சங்கங்களின் கண், ரத்ததானம், பல் சிகிச்சை, முகாம்கள்
Komarapalayam King 24x7 |12 Aug 2024 9:21 AM GMT
குமாரபாளையம் அனைத்து லயன்ஸ் சங்கங்களின் சார்பில் கண், ரத்ததானம், பல் சிகிச்சை, முகாம்கள் நடந்தன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம், குமாரபாளையம் லயன்ஸ் சங்கம், மத்திய லயன்ஸ் சங்கம், டெக்ஸ்சிட்டி லயன்ஸ் சங்கம், பவானி, குமாரபாளையம் லயன்ஸ் சங்கம், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், உதவும் கரங்கள், ஈரோடு மணியன் மெடிக்கல் செண்டர் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை, ரத்ததான முகாம், புற்று நோய் கண்டறிதல் முகாம், மகப்பேறு மருத்துவம், பல் சிகிச்சை முகாம், சர்க்கரை மற்றும் பொது மருத்துவ முகாம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. இந்த முகாம்களை மாவட்ட ஆளுநர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். ரத்ததான முகாமில் 57 பேர் ரத்த தானம் வழங்கினர். கண் சிகிச்சை முகாமில் 129 பயனாளிகள் பங்கேற்க, 52 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். பல் சிகிச்சை முகாம் மற்றும் இதர முகாம்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பயன் பெற்றனர். தாய்ப்பால் வார விழாவையொட்டி 50 தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கான பரிசு தொகுப்பு பெட்டகங்கள் பரிசாக வழங்கபட்டது. இதில் மாவட்ட துணை ஆளுனர் விஸ்வநாதன், கண்ணொளி திட்ட தலைவர் மோதிலால், சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஜெகதீஷ், சண்முக சுந்தரம், கதிர்வேல், சரவணகுமார், சவுந்தர், மோகன், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர்.
Next Story