"போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
Karur King 24x7 |12 Aug 2024 9:58 AM GMT
"போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
"போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11ஆம் தேதி போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகம் ஏற்பட்டு வருவதையும், அதனால் இளைஞர்களின் எதிர்காலம் வீணாகி வருவதை, முதலில் கட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, இன்று தமிழக முழுவதும் போதைப் பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் பெருந்திரள் உறுதிமொழி ஏற்பதற்கும் அரசு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கல்லூரி மாணவ - மாணவியர் பங்கேற்ற "போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" என்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கல்லூரி மாணவ- மாணவியர் என ஏராளமானோர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி காளியப்பனூர், தாந்தோணிமலை வழியாக சென்று அரசு கலைக் கல்லூரியை சென்று அடைந்தது. பேரணியின் போது, போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவ-மாணவிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தி சென்றனர். இதனைத் தொடர்ந்து கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Next Story