வெங்ககல்பட்டியில் அரை நிர்வாணத்துடன் காயங்களுடன் பெண் சடலம் மீட்பு. கரூரில் பரபரப்பு.

வெங்ககல்பட்டியில் அரை நிர்வாணத்துடன் காயங்களுடன் பெண் சடலம் மீட்பு. கரூரில் பரபரப்பு.
வெங்ககல்பட்டியில் அரை நிர்வாணத்துடன் காயங்களுடன் பெண் சடலம் மீட்பு. கரூரில் பரபரப்பு. கரூர் வெங்கக்கல்பட்டி அருகே சின்னமநாயக்கன்பட்டி பிரிவிலிருந்து டாஸ்மாக் கடைக்குச் செல்லும் வழியில் பயன்பாட்டில் இல்லாத தகரக்கொட்டகை ஒன்று உள்ளது. இங்கு ஏற்கெனவே அனுமதியில்லாத பார் போல சால்னா கடை செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் தலையில் காயத்துடன் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இந்தக் கொட்டகைக்குள் அரை நிர்வாண நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் அளித்த தகவலின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த பெண் கரூர் மாவட்டம், புலியூர் அருகே வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த முத்தாயி வயது 55 என்பதும், அவர் சித்தாள் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் நடந்த இடத்தில் நேற்றிரவு ஒரு ஆணும், பெண்ணும் வாக்குவாதம் செய்து சண்டையிட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து, முத்தாயியின் உறவினரான ஏமூரைச் சேர்ந்த முதியவர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன மாதிரியான குற்றச்செயல் நடைபெற்றது என்பது குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story