பங்களாதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை தடுக்க ஐநா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்கள் கூட்டமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு.

பங்களாதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை தடுக்க ஐநா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்கள் கூட்டமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு.
பங்களாதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை தடுக்க ஐநா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்கள் கூட்டமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இன்று நடைபெற்ற முகாமில் இந்துக்கள் கூட்டமைப்பின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் காலனி மணி தலைமையில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களை காப்பாற்றவும், கோயில்கள் இடிப்பு, சொத்துக்கள் சூறையாடல், பெண்கள் மானபங்கம், கட்டாய மதமாற்றம் ஆகியவற்றை தடுத்து நிறுத்த வேண்டி மனு அளித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாநகர தலைவர் விஜயேந்திரன், சிவசேனா தமிழகம் அமைப்பின் மாநில செயலாளர் சக்தி முருகேசன், பிரச்சாரணி மாநில செயலாளர் சரவணன், அகில பாரத மக்கள் கட்சி மாவட்ட தலைவர் யுவராஜ் கலந்து கொண்டனர். இது குறித்து செய்தியாளரிடம் தெரிவித்த இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் காலனி மணி, பங்களாதேஷத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களை கடுமையாக தாக்கியும், மானபங்கம் செய்தும், சொத்துக்களை சூறையாடி வருவது வேதனைக்குரியது என்றும், இந்த நடவடிக்கைகளை ஐநா சபை கட்டுப்படுத்தி, சமாதானமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக தெரிவித்தார்.
Next Story