போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடா.!

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை மக்கள் இயக்கமாக மாணவர்கள் எடுத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு வலியுறுத்தல்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காவல்துறை சார்பில் "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலமாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைஞர்களின் நலன் கருதி அவர்களது எதிர்காலத்தை நல்வழிப்படுத்திடும் வகையில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுத்திட ”போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். இன்றைய தினம் ”போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றக்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் போதை பொருட்கள் ஒழித்திடும் வகையில் காவல்துறையின் மூலம் பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்றைய இணைய தள உலகில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறோம். மாணவர்களாகிய நீங்கள் இணைய தளத்தில் உள்ள நல்ல கருத்துகளை மட்டும் எடுத்து கொண்டு தங்கள் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொண்டு வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பி தான் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் விட்டு செல்கின்றனர். நாள்தோறும் குழந்தைகளின் மன நிலை, உடல்நிலை குறித்து கண்காணித்திட வேண்டிய மிக முக்கிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. ஆசிரியர்கள் பள்ளியில் ஒவ்வொரு குழந்தைகளையும் தாய் அன்போடு கண்காணித்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய செய்திட வேண்டும். பள்ளி, கல்லூரி வளாகங்களிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் போதைப் பொருட்கள் விற்பனை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை மற்றும் அரசுத்துறைகள் சார்பில் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாணவ செல்வங்கள் பரந்து விரிந்த உலகில் சுய கட்டுபாட்டோடு இருந்து, தங்களுக்கான திறமையை கல்வி மட்டுமின்றி விளையாட்டு, இசை, நடனம் போன்ற பல்வேறு துறைகளிலும் தங்களை மேம்படுத்தி கொண்டு சரியான பாதையை தேர்வு செய்து தங்களது வெற்றி இலக்கை அடைந்திட வேண்டும். மேலும், மாணவ செல்வங்கள் தங்கள் பெற்றோருக்கு பிடிக்காத எந்தவொரு செயலையும் செய்திட கூடாது. அவர்கள் தன்னை தானே வருத்தி கொண்டு தான் உங்களுக்கு இத்தகைய நல்ல சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துள்ளார்கள். மேலும், தங்கள் நண்பர்கள் எவரேனும் தவறான பாதையில் செல்வதை நீங்கள் உணர்ந்தால் அவர்களை நல்வழிபடுத்துவது நண்பர்களாகிய உங்களது கடமை. எனவே, மாணவ செல்வங்கள் தங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் மேம்படுத்தி கொண்டு நம் நாட்டிற்கும், நம் மாவட்டத்திற்கும், தங்களது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நல்ல பெயரை வாங்கித் தர வேண்டும் எனக் கூறினார் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன் ஆகியோர் ”போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற ”போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் அவர்கள் ஆகியோர்‌ 1,500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்.
Next Story