தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிர்வாகிகள்
அருந்ததியர் சமூகத்திற்கு தமிழக அரசு வழங்கிய 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு பல்வேறு அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தனர். அந்த வகையில் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவனத் தலைவர் அ.சு.பவுத்தன் மற்றும் இளைஞர் அணி செயலாளர் பிரதாப் ஆகியோர் சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story



