பவானிசாகர் அருகே யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் பலி
Bhavanisagar King 24x7 |12 Aug 2024 12:51 PM GMT
பவானிசாகர் அருகே யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் பலி
பவானிசாகர் அருகே யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் பலி ஈரோடு மாவட்டம், சத்தி புலிகள் காப்பகத்தில் ஊட்டி , கோத்தகிரி, தெங்குமரஹாடா, கல்லாம் பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (49) என்பவர் வேட்டை தடுப்பு காவலராக கடந்த 18 வருடங்களாக பணிபுரிந்து வருவகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி லட்சமி, மகள் திவ்யா உள்ளனர். நேற்று மாலை 7 மணிக்கு பவானிசாகர் காவல் நிலைய சரகம் சிங்கமலை பீட்டில் இரவு கண்காணிப்பு கோபுர பணியில் ஈடுபட்டிருந்தார். இவருடம் மூன்று வேட்டை தடுப்பு காவலர்கள் இருந்துள்ளனர். இன்று அதிகாலை 5 மணிக்கு தங்கராஜ் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது புதர் மறைவில் இருந்த காட்டு யானை துரத்தியதில் கீழே விழுந்தார். அவரின அலறல் சத்தம் கேட்டு கோபுரத்தில் இருந்த இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் ஒன்று சேர்ந்து பார்த்த போது மூச்சு பேசி இல்லாமல் இருந்தவரை அருகில் உள்ள கல்லம்பாளையம் ஊருக்கு எடுத்துச் வீட்டில் வைத்து பார்த்துள்ளனர். அவர் தற்போது இறந்து விட்டதாக போலீஸார்க்கு தகவல் தெரிவித்தனர். பவானிசாகர் போலீஸார் மேற்படி பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பவானிசாகர் உதவி ஆய்வாளர் எட்வின் டேவிட் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story