நன்செய் இடையாறு சிவன் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜைவிழா.
Paramathi Velur King 24x7 |12 Aug 2024 1:21 PM GMT
பரமத்தி வேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு சிவன் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜைவிழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த நன்செய் இடையாற்றில் திருமணிமுத்தாற்ங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரவல்லி அம்பிகா சமேத திருவேலீஸ்வரர் சுயம்பு சிவாலயம் இந்த சிவ ஆலய பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயம் கிபி 10ம் நூற்றாண்டு ஸ்தலம் இந்த ஆலயம் முதலாம் ராஜாராஜசோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது. இன்றுஆடிமாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜைவிழா மிக விமர்சை நடைபெற்றது அப்போது ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனாருக்கு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி, கலசம் கொண்டு உட்பட 11 வகை வாசனை திரவியபெருட்கள் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 7 முக தீப உபசரிப்புகள் காண்பித்த பின் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது .இதில் ஏராளமான பக்தர்கள் மூலவர்திருவேலீஸ்வரரையும் மற்றும்சுந்தரமூர்த்தி நாயனாரை வணங்கி சென்றனர்.
Next Story