மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் புடவைகாரி அம்மன் கோயில் திருவிழா.

X
Paramathi Velur King 24x7 |12 Aug 2024 7:31 PM ISTபரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் அருகே மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் புடவைகாரி அம்மன் கோயில் திருவிழா.
பரமத்தி வேலுார், ஆக 12: நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே கே.கொளந்த பாளையம் கிராமத்தில் புடவைக்காரியம்மன், கன்னிமார், கருப்பண்ணசாமி, முத்தையன் சுவாமி கோவில் உள்ளது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஆடி மாசம் திருவிழா நடத்துவது வழக்கம். திருவிழாவை முன்னிட்டு கடந்த 7 ம் தேதி காலை 9:00 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், கோமாதா பூஜை நடந்தது. கடந்த 8 ம் தேதி பரமத்தி வேலுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், காலை 10:00 மணிக்கு கன்னிமார் அழைத்து வருதல் மற்றும் சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து இரவு வான வேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு புடவைக்காரியம்மன், கருப்பண்ணசாமி, முத்தையன் சுவாமி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கிடா வெட்டு பூஜை நடந்தது.திருவிழாவை முன்னிட்டு கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் தொடர்ந்து மூன்று நாட்களாக அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மற்றும் பள்ளிகளுக்கு திருவிழாவை முன்னிட்டு நேற்று உள்ளூர் விடுமுறையாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
