போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை சார் ஆட்சியர் கோகுல் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் பாலக்கரையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து நடத்திய போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பிலான விழிப்புணர்வு பேரணியை சார் ஆட்சியர் கோகுல், தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இன்று (12.08.2024) தொடங்கி வைத்தார். போதைப்பொருள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் காவல்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவாயிலில் இருந்து போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் சார் ஆட்சியர் கோகுல் தலைமையில் தொடங்கி வைத்தார். போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இப்பேரணியில் 600க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர். பேரணியானது நகராட்சி அலுவலகத்தில் நிறைவுற்றது.
Next Story