கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்க்கும் நிகழ்ச்சி
Perambalur King 24x7 |12 Aug 2024 3:00 PM GMT
உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் பெரம்பலூர் எம் எல் ஏ பிரபாகரன் மற்றும் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் 3000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் உறுதிமொழியினை ஏற்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 79,626 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2,300 மாணவ மாணவிகள் "#DRUGS FREE PERAMBALUR" என்ற எழுத்து வடிவில் நின்று நம் பெரம்பலூர் மாவட்டத்தை போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற தங்களின் முழுப்பங்களிப்பை வழங்குவோம் என முழக்கமிட்டு போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஏற்றுக் கொண்டனர்
Next Story