அரசுப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு !

சங்ககிரி : தேவண்ணக் கவுண்டனூர் அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு..
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமையாசிரியை வசந்தாள் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இணைய வழியில் உறுதிமொழி வாசிக்க ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள், பெண் காவலர்கள் உள்ளிட்ட பலர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சங்ககிரி காவல் நிலைய தலைமை பெண் காவலர்கள் தங்கமணி மற்றும் ரேவதி ஆகியோர் மாணவர், மாணவிகளிடையே போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், யாரேனும் போதை பொருட்களை விற்பனை செய்தால் உடனடியாக காவல் நிலைய உதவி எண் 181 மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் குறித்து ரகசியமாக வைக்கப்படும் என்று கூறினர். போதைப்பொருள் எதிர்ப்பு தினம் பள்ளிகளில் அனுசரிக்கப்படுவதன் நோக்கம் குறித்து ஆசிரியர் இரா.முருகன் பேசினார். அப்போது பள்ளியின் ஆசிரியர்கள் சீனிவாசன் ,.சித்ரா, தீபா மற்றும் மாணவ,மாணவிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
Next Story