குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் அவதி

குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்து  பொதுமக்கள் கடும் அவதி
குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் அவதி
செங்கல்பட்டு மாவட்டம் அச்சறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்ப்பட்ட திருமுக்காடு ஊராட்சியில் கடந்த ஒரு வருடமாக மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கப்படாமல் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்தது இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்டது திருமுக்காடு ஊராட்சி இந்த ஊராட்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் போதிய மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கப்படாமல் அவ்வப்போது வரும் மழை காரணமாக மழைநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்வதாகவும் குறிப்பாக தெரு வீதி முன்புறம் சிறு பாலம் அமைக்கப்பட்டு அப்பணியை கடந்த ஒரு வருடம் ஆக தொடராமல் நிலுவையில் உள்ளதால் அதன் ஒரு பகுதியில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இந்நாள் வரை எந்த ஒரு மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story