புத்தூர் கிராமத்தில் பால்குடம் எடுத்த பெண்கள்

X
கெங்கவல்லி:தலைவாசல் அருகே புத்தூர் ஊராட்சியில் ஆடிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு நேற்று அருள்மிகு மாரியம்மன் சுவாமிக்கு கூழ் படைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பின் 300க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலம் வந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஊர்வலத்தின் போது மகளிரும் இளைஞர்களும் சிறப்பாக நடனம் ஆடி வந்தனர். பல பேர் சாமி ஆடி வந்து சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

