விழுப்புரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட கூடுதல் மழை பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட கூடுதல் மழை பதிவு
ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 2.50 சதவீதம் கூடுதல் மழை பதிவாகியுள்ளது
விழுப்புரம் மாவட்டத்தில், ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதத்தில், இயல்பான மழையாக சராசரியாக 108 மி.மீ. பதிவாகி வந்துள்ளது. ஆனால், இந்தாண்டு கடந்த 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை, மாவட்டத்தில் 284.95 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 2.5 மடங்கு அதிகமாகும்.விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த நான்கு நாட்களில் சராசரியாக 181.80 மி.மீ அளவில் மழை பெய்துள்ளது. குறிப்பாக, விழுப்புரம் தாலுகாவில் கடந்த 4 நாட்களில் மட்டும் 552 மி.மீ., மழையும், மரக்காணம் தாலுகாவில் 226 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.விழுப்புரம் தாலுகாவில் கடந்த 10ம் தேதி ஒரே நாளில் 220 மி.மீ., அளவிலும், 11ம் தேதி 130 மி.மீ., அளவிலும் மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மழையாகும்.இதனால், விழுப்புரம் நகரில் பல இடங்களிலும், மழைநீர் அதிகளவு தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story