விருக்ஷா குளோபல் பள்ளியில் செஸ் விளையாட்டு போட்டி
Tiruchengode King 24x7 |13 Aug 2024 2:40 AM GMT
விருக்ஷா குளோபல் பள்ளியில் செஸ் விளையாட்டு போட்டி
திருச்செங்கோடு விருக்ஷா - குளோபல் பள்ளியில் 8-வது மாநில அளவிலான செஸ் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டி யில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவின் தொடக்க மாக விருக்ஷா குளேர்பல் பள்ளியின் தலைவர் ராஜசேகரன். சிறப்பு விருந்தினர் நித்ரா ஆப்ஸ் இந்தியா நிறுவன தலைவர் கோகுலநாதன், பள்ளி தாளாளர் ஹரி நிவாஸ் ராஜசேகரன், இயக்குனர் நிவேதா ஹரிநிவாஸ், முதல்வர் ஹேமமாலினி, துணை முதல்வர் கவுரிசங்கர், தலைமை ஆசிரியை அம்பிகா, செயல் அலுவலர் கிருஷ்ணகுமாரி ஆகியோர் குத்துவிக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். 6 சுற் றுகளாக சதுரங்க போட்டி நடைபெற்றது. இதையடுத்து சதுரங்க விளையாட்டில் வெற்றி பெற்ற முதல் 10 மாண வர்களுக்கு சிறப்பு விருந்தி னர்களாக நாமக்கல் மாவட்ட சதுரங்க தலைவர் டாக்டர் ரமேஷ், செயலாளர் ஞான சேகரன், பள்ளியின் தலைவர் ராஜசேகரன், தாளாளர் ஹரி நிவாஸ், ராஜசேகரன், பிரேம் நிவாஸ் ஆகியோர் சான்றிதழ் கோப்பை வழங்கினர். முதல் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ-மாண விகளுக்கும் பங்கேற்பு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.
Next Story