போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் விளையாட்டுப் போட்டிகள்
Tiruvallur King 24x7 |13 Aug 2024 6:25 AM GMT
ஆவடி காவல் ஆணையர் சங்கர் இளைஞர்கள் மாணவர்கள் இடையே போதைப் பொருட்கள் பயன்பாடுகளால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியேற்று இருசக்கர வாகனபேரணி மற்றும் ACP கிரிக்கெட்கோப்பை விளையாட்டுப் போட்டியை தொடங்கிவைத்தார்,
ஆவடி காவல் ஆணையர் சங்கர் இளைஞர்கள் மாணவர்கள் இடையே போதைப் பொருட்கள் பயன்பாடுகளால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியேற்று இருசக்கர வாகனபேரணி மற்றும் acp கிரிக்கெட்கோப்பை விளையாட்டுப் போட்டியை தொடங்கிவைத்தார், திருவள்ளூர்மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை இளைஞர்கள் மாணவ,மாணவியர்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக கிரிக்கெட்போட்டியை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர்ஐபிஎஸ் தொடங்கி வைத்து உறுதிமொழியை ஏற்று இளைஞர்கள் மற்றும் காவல்துறையினரின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு கையெழுத்து இயக்கத்தினையும் நடத்தி வைத்தார் தமிழகத்தை போதையில்லா மாநிலமாக உருவாக்கும் விதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவில் காவல்துறையினர் மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர் அதன் ஒரு நிகழ்வாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஆவடி தனியார் கல்லூரியில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் இரு சக்கர வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன் தமிழக முதலமைச்சர் காணொளியில் உறுதிமொழி படிவத்தை வாசிக்க அதை அனைவரும் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றனர் அதேபோன்று ஆவடி காவல் ஆணையராகம் அருகே உள்ள தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் ஏ சி பி கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியினை கிரிக்கெட் விளையாடி மேலும் போதைப் பொருள்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தினையும் நடத்தினார் இதில் ஆவடி காவல் ஆணையரக இணை ஆணையர் உதவி ஆணையர் காவல் ஆய்வாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கையொப்பமிட்டனர். தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை இளைய சமுதாயத்தை போதைப் பொருட்களின் பழக்கத்திலிருந்து இருந்து காக்கும் நடவடிக்கையை ஆவடி காவல் ஆணையரகம் முன்னெடுக்கும் என ஆணையர் சங்கர் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Next Story