திருப்பத்தூரில் படிப்பை தொடர முடியாமல் இருந்த மாணவர்களுக்கு சிறப்பு முகாம்
Tirupathur King 24x7 |13 Aug 2024 7:21 AM GMT
திருப்பத்தூரில் படிப்பை தொடர முடியாமல் இடையில் நின்ற மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கு சிறப்பு முகாம்
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர் கல்வி வழிகாட்டி இடையில் நின்ற மாணவர்களை தொழிற்கல்வியில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில்நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டி இடையில் நின்ற மாணவர்களை தொழிற்கல்விகள் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவ மாணவியர்கள் படிப்பை தொடர முடியாமல் பல்வேறு சூழ்நிலையிலும் காரணங்களால் படிப்பை பாதியில் நின்றவர்களை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் உத்தரவின் பேரில் கிராம நிருவாக அலுவலர்,மற்றும் ஊராட்சி தலைவர்கள் மூலம் கண்டறியப்பட்டு இன்று ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடத்தப்பட்டது இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளியை விட்டு இடையில் நின்றவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் படிப்பதற்கும் 10 ,12,ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பெராதவர்களுக்கும் தொழிற்கல்வி சேர்ப்பதற்கான முகாமில் ஐடிஐ , கேன்றின்,நர்ஸ்,உள்ளிட்ட படிப்பை படிப்பதற்கான சான்றிதழைமாவட்ட ஆட்சியர் வழங்கினார் இந்த முகாமில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் பகுதியிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்ச்சியில் கல்வித் துறைச் சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிட தக்கது
Next Story