கார் மோதிய விபத்தில் வியாபாரி பலி
Perambalur King 24x7 |13 Aug 2024 7:29 AM GMT
போலீசார் விசாரணை
பெரம்பலூர் மாவட்டம், மாங்களமேடு அருகே உள்ள சித்தளி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ்(வயது 48). இவர் நாவல்பழ வியாபாரம் செய்துவந்தார். தனது சொந்த வேலை காரணமாக முருகன்குடி பிரிவு பாதையில் இருந்து, அவர் ரஞ்சன்குடி சென்றார். அப்போது எதிரே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த ரமேஷ் (40) ஓட்டி வந்தகார், நடராஜ் மீது மோதியது. இதில் கீழே விழுந்ததில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு போலீசார் நடராஜனை ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story