நீச்சல் பயிற்சியில் மாற்றுத்திறன் வாலிபர் உலக சாதனை
Salem (west) King 24x7 |13 Aug 2024 10:07 AM GMT
மேயர் ராமச்சந்திரன் பாராட்டு
சேலம் அழகாபுரத்தை சேர்ந்த மாதேஸ்வரன்- மேகலா தம்பதியின் மகன் ஹரி சுதன். மாற்றுத்திறன் வாலிபரான இவர் நீச்சல் வீரர். 24 வயதான சுதன் நேற்று உலக இளைஞர் தினத்தையொட்டி நீச்சல் பயிற்சியில் உலக சாதனை நிகழ்த்தினார். அதாவது, சேலம் அழகாபுரம் அஸ்வா பார்க் நீச்சல் குளத்தில் நடந்த நிகழ்ச்சியில் 250 மீட்டர் தூரத்தை 8 நிமிடம் 11 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார். நீச்சலின் போது விவேகானந்தரின் பொன்மொழிகளை கைகளில் ஏந்தி நீந்தி சென்றார். ஹரிசுதன் தேசிய அளவிலான போட்டியில் ஒரு தங்கம், 2 வெள்ளி பதக்கங்களும், மாநில அளவிலான போட்டியில் 2 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கங்களும் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த சாதனையை உலக சாதனையாக அங்கீகரித்து நோபிள் உலக சாதனை அமைப்பு சான்றிதழ் வழங்கியது. இந்த சான்றிதழை மேயர் ராமச்சந்திரன், சுற்றுலா அலுவலர் வினோத், டாக்டர் சசிகுமார், ஆனந்தராஜ் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
Next Story