கரூரில், சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலகு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Karur King 24x7 |13 Aug 2024 10:44 AM GMT
கரூரில், சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலகு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூரில், சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலகு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் சுமதி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் பங்கேற்று மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நர்சிங் கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் கரூர் கலை அறிவியல் கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்று, மனித சங்கிலி அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இளம் வயதில் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கும், தவறான நபருடன் கொள்ளும் உடலுறவு, பரிசோதிக்கப்படாத ரத்தத்தை பயன்படுத்துவது போன்ற பிரச்சனைகளால் எய்ட்ஸ் நோய் பரவி வருகிறது. எனவே, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலமாக மாணவ,மாணவியர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், நகரப் பகுதிகளில் வலம் வரும் ஆட்டோக்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Next Story