வெள்ளக்கோவிலில் தீ விபத்து எட்டு லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

X
வெள்ளகோவில் முத்தூர் சாலை மாந்தபுரம் அருகில் உள்ள நாட்ராய சாமி கோவில் பகுதியில் ஜெகதீசன் (வயது 59) என்பவர் கடந்த 10 வருடங்களாக ஓபன் என்ட் நூற்பாலை நடத்தி வருகிறார். இந்த நூற்பாலை நேற்று பகல் நேரத்தில் வழக்கமாக இயங்கிக் கொண்டிருந்தபோது ஒரு எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது அனைத்து பகுதிகளிலும் பரவியது. உடனே வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் எந்திரங்களில் சில பகுதிகள், பஞ்சுகள், நூல்கள் என சுமார் ரூ. 8 லட்சம் மதிப்பில் பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியது. இந்த தீ விபத்தில் அங்கு வேலை செய்த யாருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
Next Story

