சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தின கொண்டாட்டம்.

சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தின கொண்டாட்டம்.
சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தின கொண்டாட்டம். கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தினம் நிகழ்ச்சி நேற்று ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதனால் ** ஏற்படும் தீமைகள் மற்றும் விளைவுகளை பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். பின்னர் அனைத்து மாணவர்களும் போதைப் பொருளுக்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கி, வெண்ணைமலை கடைவீதி வரை சென்று,மீண்டும் பள்ளி வளாகத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணாக்கர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பாண்டியன், பள்ளியின் முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பள்ளியின் முதல்வர், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பழனியப்பன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
Next Story