சின்னமநாயக்கன்பட்டியில் அடையாளம் தெரியாத நபரால் பெண் கொலை. மகன் அளித்த புகாரில் காவல்துறை வழக்கு பதிவு.
Karur King 24x7 |13 Aug 2024 12:17 PM GMT
சின்னமநாயக்கன்பட்டியில் அடையாளம் தெரியாத நபரால் பெண் கொலை. மகன் அளித்த புகாரில் காவல்துறை வழக்கு பதிவு.
சின்னமநாயக்கன்பட்டியில் அடையாளம் தெரியாத நபரால் பெண் கொலை. மகன் அளித்த புகாரில் காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புலியூர் அருகே பி.வெள்ளாளப்பட்டி, மாரியம்மன் கோவில் எதிரே வசித்து வந்தவர் மறைந்த பிச்சை மனைவி முத்தாயி வயது 56. இவர் ஆகஸ்ட் 12ஆம் தேதி, கரூர் மாவட்டம், பாளையம் - கரூர் செல்லும் சாலையில், சின்னமநாயக்கன்பட்டி பகுதியில் அமைத்திருந்த ஒரு தகரக் கொட்டாயில் கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்ததை அறிந்த அவரது மகன் ராஜேந்திரன், காவல்துறையினருக்கு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட முத்தாயி பின்னந்தலை மற்றும் வலது காது பகுதியில் காயத்துடன் இருந்தது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக முத்தாயி உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story