கரூர் பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது.
Karur King 24x7 |13 Aug 2024 12:44 PM GMT
கரூர் பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது.
கரூர் பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, முத்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் மகன் செந்தில்குமார் வயது 34. இவர் ஆகஸ்ட் 12ஆம் தேதி மாலை 5 மணி அளவில் கரூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த கரூர், தெற்கு காந்திகிராமம், இந்திரா நகரை சேர்ந்த சின்னதுரை மனைவி கனிமொழி வயது 34 என்பவர், செந்தில்குமார் அருகே வந்து நின்று கொண்டு அங்குமிங்கும் பார்த்து பாவனை செய்த அவர், செந்தில்குமார் அசந்த நேரத்தில் அவரது பாக்கெட்டில் இருந்த ரூபாய் 200 பிக்பாக்கெட் அடித்துள்ளார். சுதாரித்துக் கொண்ட செந்தில்குமார் கனிமொழியை கையும் களவுமாக பிடித்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கனிமொழியை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்
Next Story