உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு
Kangeyam King 24x7 |13 Aug 2024 3:53 PM GMT
காங்கேயத்தில் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது
காங்கேயத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில் நேற்று உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு வாசகங்களை கொண்ட ஸ்டிக்கர்களை ஆட்டோவில் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. காங்கேயம் பேருந்து நிலையம் மற்றும் படியூர் பஸ் நிலையங்களில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தப்படும் ஆட்டோகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. முகாமில் மருத்துவர்கள் சந்திரசேகர், தியாகராஜன் சூர்யா லட்சுமி, காசநோய் பிரிவு வளர்மதி பால்வினை நோய் ஆலோசகர் கருப்புசாமி, ஆய்வக நுட்புணர் கருணாநிதி, நிலா மற்றும் இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Next Story